திங்கள், 4 மே, 2015
செவ்வாய், 28 ஏப்ரல், 2015
புலம்பல்கள்.
புலம்பல்கள்.
இவ்வுலகத்தையும், உலகத்தில் உள்ள உயிர்களையும் அனைத்தையும் இயக்குவது இறைவனாகஇருந்தாலும்,
இயற்க்கையாக இருந்தாலும்,நாம் அறிந்து கொள்வதால் எந்த பயனும் இருப்பதாக
தெரியவில்லை.
ஏனெனில் இயக்குவது,
இறைவனோ,
இயற்க்கையோ,அல்லது செயற்க்கையோஇவைகள் இயக்கினால் மட்டுமே நாம் இயங்குவதாக இருக்கும்போது,
நாம் முயன்று அறிந்து கொள்வது என்பது, இயலாததும் பயன் அற்றதும் ஆகும்.
உயிர்கள் தாமாகவே இயங்குகின்றனவா? இயக்கினால் இயங்க கூடியனவா?
உயிர்கள் தாமாகவே இயங்குவதாக வைத்துக்கொண்டால்,
பிறப்பு நம் விருப்பபடி ஏன் அமைவதில்லை? பெற்றோரை நாமே தேர்வு செய்கிறோமா?
வாழ்க்கையும் விரும்பும்படி ஏன் அமைவதில்லை?எல்லோரும் செல்வந்தராவது இல்லை. ஆனால் எல்லோரும் செல்வந்தராக வேண்டும் என்று விரும்புகிறோம்.
இறப்பும் நாம் விரும்பியபோது ஏன் நிகழ்வதில்லை?{ தற்க்கொலையை தவிர}
நம்மை நாமே
படைத்துக்கொள்வதாக இருந்தால் ஏன் இறவாமலும் ஊனமில்லாமலும் படைத்துக்கொள்வதில்லை இவைகள் எல்லாம் காலத்தின் கட்டாயமா?காலம் எப்படி வந்தது?இயக்கத்தினால் காலம் வந்தது. இயங்காவிட்டால் காலம் இல்லையா? ஆம் இயங்காத பொருளுக்கு காலம் ஒன்று கிடையாது. பொருள்கள் இயங்காவிட்டால் உபயோகம் என்ன?பொருள்கள் உண்டானதின் நோக்கம் என்ன? அதை இனி தெரிந்து கொள்ள வேண்டும். எப்போது?
அதுவும் காலத்தினால் தான் தெரிந்து கொள்ள முடியும். எல்லாம் நாம் செய்வது போலவே இருக்கின்றது. ஆனால் எதுவும் நம் விருப்பப்படி ஏன் நடப்பதில்லை.
உயிர்களை இறைவனோ இயற்க்கையோ இயக்குவதாக வைத்துக்கொண்டால்,
இறைவனையோ, இயற்க்கையையோ, உயிர்கள் தரிசனம் செய்து தன்
கோரிக்கைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றிக் கொள்ள ஏன்
முடிவதில்லை.நமக்கு ஏன் தெரியவில்லை.நாம் மறந்து விட்டோமா?
இனிமேல்தான் தெரிந்து கொள்ள வேண்டுமா?
மரணத்திற்க்குப்பின் மனிதனின் நிலை என்ன?
எவருக்கும் தெரியாது அதைப்பற்றிய அனுமானங்களும்,
கற்பணைகளும் ஏராளம்.
இறந்தவர்கள்
எங்கு இருக்கிறார்கள் என்று நிரூபிக்க முடியவில்லை.
இறந்தவர்கள்
பிறந்தார்கள் என்பதற்க்கும் நிரூபணம் இல்லை.
பிறந்தவர்கள்
இறப்பார்கள் என்பது அனுபவமாய் இருக்கிறது.
இறந்தவர்கள்
பிறப்பார்கள் என்பது அனுமானமாய்
இருக்கிறது.
இருப்பவர்கள் இன்னமும் இருப்பார்கள் என்பது நம்பிக்கையாய் இருக்கிறது.
ஆனால் இப்பிரபஞ்சம் எப்போதும் இருப்பதாக தோன்றுகிறது.
வாசமும், பாசமும் ஒன்றே ஆகும்.
வாசமும், பாசமும் வியாபகம் உடையது.
மணத்தை உடையது வாசம்.
மனத்தை உடையது பாசம்.
இதன் வசம் சிக்கியவைகளால் மீள முடியாது.
வாசம் என்றால் மணம் என்பதாகும்.
வாசமும்,மணமும்,
மனமும் வீசும்
{ பரவும்} தன்மையுடையது.
மனத்தின் வசம் சிக்கியவைகள் புலன்கள் ஆகும்.
புலன்களால் பாதிப்பவை பிராணன் எனும் உயிராகும்.
இதனால் பாதிப்பது ஆன்மாவின் விளக்கம் எனும் வியாபகம் ஆகும்.
நம் புலன்களுக்கு எல்லை உண்டு. நம்புலன்களின் எல்லைக்கு அப்பாலும்
பொருள்கள் உண்டு.
இது வரை தோன்றியுள்ள தத்துவங்களும்,
வேதங்களும் எல்லாவற்றையும் கூறிவிட்டன.
என்ன கூறியது?
அன்பே சிவம், அன்பே கடவுள் என்று கூறியது.
நாம் எவரிடம் அன்பு காட்டியுள்ளோம்.
நாம் காட்டும் அன்பு என்பது சுயநல அன்பாகும்.
எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி இந்த உலகத்தில் அணைத்து உயிர்களிடத்தும்
ஒருமை உணர்வுடன் அன்பு பாராட்டவேண்டும்.
ஆனால் நாமோ எண்ணற்ற கேள்விகளைக் கேட்டுக்கொண்டு எதையும் செய்யாமல்
சோம்பலாகவேஇருக்கிறோம்.
இதற்க்கு அடிப்படை குற்றவாளி சாக்கரட்டீஸ்,மற்றும் பகுத்தறிவுவாதிகளின் தவறான அணுகுமுறையே ஆகும். என்று நான் கருதுகிறேன்.
சாக்ரட்டீஸ், கூறிய ஏன்,எதற்க்கு,எப்படி, என்று சிந்திக்க வேண்டும்,
என்ற சித்தாந்தம் மிகநல்லது
அது போலவே பகுத்தறிவாளர்கள் கூறிய,
மூடநம்பிக்கைகளை பற்றிய
விழிப்புணர்வு கருத்தும்,
மூட நம்பிக்கைகளை மனிதன் முழுவதும் கைவிடவேண்டும்
என்ற கருத்தும், கண்டணமும் மிகவும் பாராட்டுக்கு உரியது.
இக்கருத்துக்களை பக்குவம் அடைந்தவர்களுக்கு மட்டுமே கூற வேண்டியதை
வெளிப்படையாககூறியது தவறான அனுகு முறையாகும்.
இவர்களுக்கு முன் வாழ்ந்தோர்களை விட இவர்களே அறிவாளி என்ற எண்ணமும்,
பக்குவ குறைவும், தொலைநோக்கத்தை பற்றிய கவனம் இல்லாமலும்,
இதற்க்கு முன் இருந்தவர்கள் வைத்திருந்த சட்டத்தை மீறியது ஆகும்.
எப்படி?
மக்களின் பக்குவத்திற்க்கு ஏற்பத்தான் உண்மைகளை வெளிப்படுத்தவேண்டும்.
எல்லோரிடமும்
எல்லா உண்மைகளையும்
கூறக்கூடாது.மீறிக்கூறினால்
விபரீதங்கள் ஏற்ப்படும்.
மனிதனின் குணத்தை நன்கு ஆராய்ந்த முன்னோர்கள் மனிதனை பயமுறுத்தவும்,
மனிதன் கட்டுப்பாடுகளை மீறாமல் இருக்கவும் சில கற்பனைகளைகூறி சென்றனர்.
ஏனெனில் மனிதன் மாபெரும் ஆற்றலை உடையவன்.
இந்த ஆற்றலை ஒழுக்கமாக பயன்படுத்தாவிட்டால் சமுதாயம் பாதிக்கப்படும்.
இதனால் அணைவருக்கும் துன்பம் ஏற்ப்படும்
இந்த ஆற்றலை சீராகவும்,ஓழுக்கமாகவும் பயன் படுத்த கற்றுக்கொள்ள வேண்டும்
என்பதற்க்காகவும்,பக்குவம் அடைவதற்க்காகவும் ஆகும்.
இல்லையெனில் எல்லா உயிர்களும் , ஒன்றுக்கு ஒன்று ஆற்றலை தவறாக
உபயோகப்படுத்தி, அழிந்துவிடும் என்ற காரணத்தினால், மனிதனுக்கு
பயத்தை உண்டாக்க சிலகற்பனைகளையும்,கதைகளையும் கூறினர்.
இதனை வைத்து சிலர் மக்களை ஏமாற்றி சுரண்டி வாழ்ந்து வந்தனர்.
மேலோட்டமாக சிந்தனை செய்த சாக்ரட்டீஸ் மற்றும் பகுத்தறிவுவாதிகள் பொங்கினர்.
முன்னோர்கள் கற்பனையாக கூறியதின் நோக்கத்தை புரிந்து கொள்ளாமல் தவறான
அனுகு முறையை பின்பற்றினர்.
அதனால் முன்னோர்கள் வகுத்த சட்டத்தை கண்டித்தனர்.
இதனை அறைகுறையாக புரிந்து கொண்ட மக்களில் பலர் சட்டத்தை முழுவதும் விட்டு விலகி
மனம் போனபடியெல்லாம் வாழ்ந்து தானும் அழிந்து தன்னைச்சார்ந்த சமுதாயத்தையும்
அழித்து
அணைவரும் நிம்மதியின்றி வாழ்ந்து வருகின்றனர்.
முதலில் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்
அது என்ன?
எல்லோரும் எல்லாமும் சமம்
ஆனால் எல்லோரும் எல்லாமும் சமம் அல்ல
பிரபஞ்சத்தின் ஆரம்ப நிலையில் அணைத்தும் சமமாக இருந்திருக்கலாம் பின்னர் ஒவ்வொன்றும்
சூழ்நிலைகளின் அமைவுகளுக்கு ஏற்ப மாறுபாடு அடைந்திருக்கவேண்டும்.
அது எப்படி?
சமையலில் உணவு தயாரிக்கும்போது அரிசி,அடுப்பு,பாத்திரம்,
நெருப்பு ஆகிய அணத்தும்
பொதுவாக இருப்பினும்,
சாதத்தின் வேக்காட்டின் தன்மை ஒன்றாக இருக்காது.
இருப்பினும்
நாம் ஒரு சாதத்தில் ஒரு அரிசியை மட்டும் எடுத்துப்பார்த்து விட்டு எல்லாம் ஒரேமாதிரி வெந்து
இருப்பதாக கருதிக்கொள்கிறோம்.
ஒருபானைச்சோற்றுக்கு ஒரு சோறு பதம் போதும் என்று பழமொழியும் கூறுவோம். ஆனால் ஒன்றுக்கு ஒன்று மாறுபட்டு தான் இருக்கும்.
குறிப்பிட்ட நிலையைதாண்டி விட்டால் ஒன்றுக்கு ஒன்றின் வித்தியாசத்தை உணரமுடியாத நிலைக்குச் சென்றுவிடும்.
இந்த உண்மையை அவரவர் ஆய்வில் கண்டு கொள்க.
மின் சாதனங்கள் அணைத்தும் மின்சாரத்தினால் இயங்கினாலும்
எல்லா மின்சாதனங்களும் ஒன்று அல்ல.
ஒவ்வொன்றுக்கும் வித்தியாசம் உள்ளது.
வாயு நிலையில் உள்ளவற்றிற்க்கும், திரவ, திட நிலையில் உள்ளவற்றிற்க்கும்,
ஒரே நிலையில்
இருந்தாலும் ஒவ்வொன்றுக்கும் வித்தியாசம் உண்டு.
அறிவு எல்லோருக்கும் ஒரே மாதிரி அமைவதில்லை.
ஆசை எல்லோருக்கும் ஒரேமாதிரி ஏற்ப்படுவதில்லை.
ஆளுமைப் பண்பே
ஆன்மா எனப்படும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)






