செவ்வாய், 28 ஏப்ரல், 2015

இப்பிரபஞ்சம் இயற்க்கையா?



இப்பிரபஞ்சம் இயற்க்கையா?
இறைவனால் உண்டாக்கப்பட்டதா?
இயக்குவோனை எண்ணங்கள் நிர்ணயம் செய்கின்றன. இயக்குவோன் பொருள்களின் அமைப்பை நிர்ணயம் செய்கிறான். பொருள்களின் அமைவு இயக்கத்தை நிர்ணயம் செய்கிறது. இயக்கம் பொருள்களின் வேகத்தை நிர்ணயம் செய்கிறது. இயக்கத்தை கவனிப்போன் காலத்தை நிர்ணயம் செய்கிறான்.
 இவையெல்லாம் இருக்க இடம் ஒன்று வேண்டும்.
 இடம் {வெளி} பொருள்களை நிர்ணயம் செய்கிறது.
பொருள்கள் எண்ணங்களை நிர்ணயம் செய்கிறது.
எனவே வெளி{இடம்} இல்லையேல் பொருள் இல்லை. பொருள் இல்லையேல் இயக்கம் இல்லை. இயக்கம் இல்லையேல் வேகம் இல்லை. வேகம் இல்லையேல் காலம் இல்லை. எல்லாமே வெளியை{இடத்தை} சார்ந்தே இருக்கிறது.
உள்ளது வெளி மட்டுமே,
இதுவே உண்மையானது. நிலையானது.எல்லையற்றது
மற்றவைகளான பொருள், இயக்கம்,காலம், இவைகள் எல்லாம் வெளியை சார்ந்தது .
வெளி இல்லையெனில் எதுவும் இல்லை.
இடத்தில்{வெளியில்-space™} பொருள். பொருளில் இருந்து இயக்கம்.
 இடத்தில் பொருள், பொருளில் இயக்கம்,
 இடம், பொருள், இயக்கம், உள்ளது அவ்வளவே.

இல்லாத பொருளுக்கும், இயங்காத பொருளுக்கும், காலமும் உருவமும், காண்போனின் கருத்தில்தோன்றாது.

காண்போனின் கருத்தில் தோன்றியவை காலமும், உருவமும் ஆகும். காண்போன் தன் கருத்தை பிறருக்கு உணர்த்துவதற்க்கு உபயோகித்த கருவி மொழியாகும். காண்பவனே பொருளின் உருவத்தையும், இயக்கத்தையும், இயக்கத்தின் அளவாகிய வேகத்தையும்,வேகத்தின் அளவாகிய காலத்தையும் நிர்ணயம் செய்கிறான். பொருள்களை நிச்சயம் செய்வது கருத்து ஆகும். பொருள்களில் காலமோ உருவமோ கிடையாது. பொருள்களுக்கு, வெளியில்{SPACE-™}தான் உருவமும் காலமும் நிர்ணயிக்கப்படுகிறது. பொருள்கள் இருப்பதோ வெளிக்குள் ஆகும். பொருளும், வெளியும் இணைந்தே இருக்கும்.
வெளிக்குள் உள்ளது பொருள் பொருளால் நிறைந்தது வெளி.
 எந்த ஒரு பொருளுக்கும், தன் உருவத்தை பற்றியோ, தான் இயங்கும் வேகத்தை பற்றியோ, தான் எவ்வளவு காலம் நிலைத்து இருப்போம் என்றும், இன்னும் எவ்வளவு காலம் இயங்குவோம் என்பது பற்றியோ தெரியாது.
பொருளின் இயக்கத்தின் அளவை நிர்ணயம்செய்வது இடத்தில் உள்ள பொருள்களின் அமைவாகிய பொருண்மை எனும் சூழ்நிலையாகும்.

அதாவது  அதை சூழ்ந்துள்ள  பொருள்கள் ஆகும்.

நினைத்த காலம் இறந்த காலமே
நினைக்கப்போகும் காலம் எதிர்காலமே.
நினைக்க மறந்துவிட்டால் எதிர் காலம் என்பதில்லை.
நினைவின்றி  நிகழ்ச்சியில்லை.
நிகழ்ச்சியின்றி காலமில்லை.
காலமில்லையேல் முக்காலமில்லை.
முக்காலமும் இருப்பது நிகழ்ச்சி ஒன்று மட்டுமே.
எக்காலமும் இருப்பது நினைவு ஒன்று மட்டுமே.
நிகழ்ந்த ஒன்றை நினைத்து ஏங்குவது கனவு எனும் கற்பனையாகும்.
நிகழ்ந்த ஒன்று மீண்டும் நிகழவேண்டும் என்று எதிர்பார்த்து ஏங்குவதும் கனவாகும்.
நிகழும் ஒன்றை நினைத்து உணர்வது நனவு எனும் வாழ்வாகும்.
நிகழும் ஒன்றை உணர மறந்துவிட்டால் அதுவே சுழுத்தி எனும் மரணமாகும்.
இதுவரை தோன்றியுள்ள யாவும், வந்திருந்தது யாவும,இப்போது இருப்பது யாவும், இப்போது வாழ்வது யாவும,இனி வரப்போவது யாவும், இனிவாழப்போவது யாவும், இயற்க்கையெனும் ஏதோ எனும் ஒன்று மட்டுமே.




வாழ்பவர் கடவுள்
வாழ்ந்தவர் கடவுள்
வாழயிருப்பவர் கடவுள்
வாழ்வது இயற்க்கை,
வாழ்ந்தது இயற்க்கை,
வாழயிருப்பது இயற்க்கை



அன்பும் அன்பின்மையும்,பண்பும் பண்பின்மையும் ஞானியும், அஞானியும்
அறிவுள்ளோனும் , அறிவற்றவனும்  இன்பமும் துன்பமும் , நட்பும் பகையும் மற்றும் எதை எப்படி கூறினும் இருப்பது யாவும் இயற்க்கை எனும் கடவுளே.
இயற்க்கை எனும் கடவுளைத்தவிர வேறு ஒன்று இல்லை இல்லை இல்லையே.
இயற்க்கையையோ கடவுளையோ வணங்கினாலும் வணங்காவிட்டாலும், பொருள்களின்
அமைவுகளுக்கு ஏற்ப்ப நடக்க வேண்டியது நடக்கும். நான் இருக்கின்றேன் நான் வாழும் உலகம் இருக்கிறது. நான் இருப்பதால் நான் வாழும் உலகை உணர்கிறேன் உலகை உணர்ந்ததால் உலகில் உள்ளவற்றையும் உணர்பவனும் உணர்ந்தவனும் ஆகிறேன் நான் உணர்வாகவும், உணர்பவனாகவும், உணர்த்தபடுபவனாகவும் இருக்கிறேன் அப்படி எனில் உணர வைப்பது எது? நான் இன்றைய நிலையில் உள்ள இந்த நிலைமைக்கு காரணம் என்ன?

 நான் இப்போது வாணிபம் செய்பவனாக இருக்கிறேன்.
 நான் ஏன் உலகை ஆளும் அதிகாரியாக இல்லை?
 சங்கராச்சியாரும் போப்பாண்டவரும் ஏன் நாத்திகனாக இல்லை?
சிதம்பரம் இராமலிங்கம் கசாப்பு கடை ஏன் வைக்கவில்லை?
பில்கிளின்டன் ஏன் சாராயக்கடை வைக்கவில்லை?
அமெரிக்க ஜனாதிபதி ஏன் விளையாட்டு வீரனாக ஆகவில்லை?
காரல்மார்க்சும் லெனினும் ஏன்தொழில்அதிபராகவும் முதலாளியாகவும் இல்லை?
கருணாநிதி ஏன் காய்கறி வியாபாரியாக இருக்கவில்லை?
எம்ஜியார் ஏன் ஏற்றுமதியாளராக இருக்கவில்லை?
ஜெயலலிதா ஏன் மருந்துக்கடை வைக்கவில்லை?
இனிப்பு ஏன் துவர்ப்பதில்லை?

 கசப்பு ஏன் இனிப்பதில்லை?
உப்பு ஏன் கார்ப்பதில்லை?
காரம் ஏன் கசப்பதில்லை?
புளிப்பு ஏன் உவர்ப்பதில்லை?
துவர்ப்பு ஏன் எல்லாமாக இருக்கவில்லை? இவைகள் எல்லாம் இவ்வாறு ஏன் இருக்கிறது என்று கேட்டால்,
 ஆன்மீகவாதியும், மத மற்றும் சமயவாதிகளும்
 மாயை என்றும், விதி, பாவம், புண்ணியம்,கர்மா.வினை என்றும்,

பகுத்தறிவுவாதி மதி என்றும் அறிவு என்றும், முயற்ச்சி என்றும்,
 விஞ்ஞானிகள் இயற்பியல் உயிரியல் வேதியியல் என்றும் கூறுகின்றனர். {விஞ்ஞானிகள் விளக்கம் கூறவும் மாட்டார்கள்.எது கூறினும் அதற்க்கு மாற்று கேள்விகளை கேட்டு,கேள்வி கேட்டவர்களை திணரச்செய்வார்கள்.மேலும் கூறுவர், ஒருகாலத்தில் இவைகளுக்குஎல்லாம் விடை கண்டுபிடிக்கப்படும் என்று.}
 எல்லாம் எரிகின்ற நெருப்பைப்போலவும், உருகுகின்ற பனியைப்போலுமாகும்.

இரண்டுக்கும் நிலையான உருவம் எது? அவரவர் ஆயிரம் காரணம் கூறி அனுமானம் எனும் அறியாமையை வெளிப்படுத்தினர். தெரியாததை தெரிந்து கொண்டனர்.அவ்வளவே.

எனது அனுமானம் என்ன என்றால்,
இவைகள் யாவும் இயல்பு,
இவைகள் யாவும் சுபாவம்,
இதுவே இயற்௧கை, இதுவே விதி

இது எத்தகையது எனில் குருடன் ஒருவன் யானைய தடவிப்பார்த்து, தனது பரிசத்தினால் உணர்ந்து யானையின் வடிவத்தை விளக்கியது போலாகும். அறியாமை வெளிப்பட்டபோது அதனை அறிவு என்றனர். ஏனெனில் அறியாமை நீங்கிவிட்டால் அறிவு மட்டும் தானே இருக்கும். விஞ்ஞானம் முதல் தத்துவஞானம் வரை எல்லாம் அனுமானம் என்றும் யூகம் என்று கூறப்படும் அறியாமையே ஆகும்.{நிரூகிக்கப்படாதவரை}


 யூகம் நிரூபிக்கப்படும்போது விஞ்ஞானம் ஆகிறது.
இருந்த ஒன்றில் இருக்கும் ஒன்று வந்தது.
இருந்த ஒன்றை இருக்கும் ஒன்று நினைத்தது, நினைக்கின்றது, நினைக்கும். அது எது? அதுவே இயற்கை.

மனிதனால்  உருவகப்படுத்தப்பட  இயற்௧கையே கடவுள்.
இருப்பது இயற்கை.
 மனிதனின் உருவகம் கடவுள்.

இருந்தது இயற்க்கை இருப்பது இயற்க்கை இனி இருக்கப்போவதும் இயற்க்கை இருப்பது கடவுள் இனி இருக்கப்போவதும் கடவுள் இருந்ததும் கடவுள் இக்காலத்திலும் எக்காலத்திலும் முக்காலத்திலும் இருந்தது இருப்பது இருக்கப்போவதுயாவும் கடவுள், கடவுள், இயற்க்கை எனும் கடவுளே இங்கு இயற்க்கையே கடவுளாக கூறப்படுகிறது. கடவுளை தவிர்த்து வேறு பெயர்களை அவரவர்விருப்பம் போல் வைத்துக்கொள்ளலாம் அல்லது கடவுளை நீக்கியும் விடலாம். நிகழ்ந்தகாலம் நிகழும் காலம் நிகழப்போகும் காலம் யாவும் நிகழ்காலமே நிகழ்ந்ததொன்றும் நிகழ்வதொன்றும் நிகழப்போவதொன்றும் நிகழ்காலமே நிகழ்ந்தது ஒன்று நினைப்பினால் நிகழ்வது ஒன்றும் நினைப்பினால் நிகழப்போவது ஒன்றும் நினைப்பினால் நினைப்பு இன்றி நிகழ்வது ஒன்றும்இல்லையே குறிப்பு; நிகழ்காலம் என்பது இறந்த அல்லது முன் இருந்த காலத்தின் மீதியாகும். அல்லது இயக்கத்தின் தொடர்ச்சியாகும். நிகழ்ந்ததொன்று நினைப்பினால் நிகழும் ஒன்றும் நினைப்பினால் நிகழ்ந்த ஒன்றை நினைக்கிறேன் நிகழும் ஒன்றை நினைப்பினால் உணர்கிறேன் நிகழப்போகும் ஒன்றை நினைப்பினால் நினைக்க முடிவதில்லை ஏன்? நினைத்த ஒன்றை மறந்து விட்டால் நிகழப்போவதை நினைப்பது எப்படி? காலம் என்றால் நிகழ்காலம் மட்டுமே நினைக்கும் காலம் நிகழ் காலமே
பொருள்கள் இருப்பது நிகழ் காலம்.
பொருள்கள் இருந்ததும் நிகழ் காலம்.
பொருள்களுக்கு காலம் இல்லை. பொருள்கள் இயங்குகின்றன. பொருள்களின் இயக்கத்தை கவனிப்பவன்{ நோக்குபவன்} காலத்தை உண்டாக்குகிறான். பொருள்களும், இயக்கமும், இயக்கத்தை கவனிப்போனும், இருப்பது இடம் என்னும் வெளிக்குள் ஆகும். பொருள்களின் இயக்கத்தின் அளவே காலம் இயற்க்கை இயற்க்கையில் இருந்த அணுக்கள். அணுக்களில் ஏற்ப்பட்ட இயக்கம். இயக்கத்தினால் ஏற்ப்பட்ட அனுபவம். அணுக்களின் அனுபவத்தினால், இயற்க்கையின் அணுக்களில் இருந்து தோன்றிய அறிவு. இயற்க்கையெனும் அறிவில் தோன்றிய நிலைபெறவிரும்பும் ஆசை. ஆசையினால் தோன்றிய முயற்ச்சி. முயற்ச்சியினால் தோன்றிய ஆணவம். ஆசை, முயற்ச்சி, எனும் தன் முனைப்பு ஆகியவற்றைக்கொண்ட ஆளுமை. EGO. சூழ்நிலைகளை சமாளிக்க கற்றுக்கொண்ட ஆளுமை சூழ்நிலைகளை புரிந்து இயற்க்கையை ஆள தெரிந்துகொண்ட ஆளுமை. இயற்க்கையை தன் வசப்படுத்தி இயற்க்கையை சுதந்தரித்துக்கொண்ட ஆளுமை. ஆளுமை பண்பு தன்னை நிலைப்படுத்திக்கொள்ளும் பொருட்டு இயற்க்கையை தன் ஆளுமையின் கலைகளால்,{திறமையால்} அனுபவங்களால், இயற்க்கையில் இருந்த அணுக்களைக்கொண்டு,அணுக்களுக்கு வடிவத்தை கொடுத்து இயக்கி வருகின்றது. இந்த ஆளுமை பண்பு தன்னை நிலைப்படுத்திக்கொள்ள, இயற்க்கையின் இயக்கத்தை கூர்ந்து கவனித்தும், இயற்க்கையின் இயக்கத்தின் நுட்பங்களை உணர்ந்தும், ஊகித்தும், இயக்கத்தில் சிக்குண்டு அனுபவித்தும், அனுபவித்தும், யூகித்தும், அறிந்தவற்றைக் கொண்டு அணுக்களின் மீது பிரயோகப் படுத்தியும்,பிரயோகப்படுத்தும்போது தோல்விகளை சந்தித்தும், பின்னர் தோல்விகளுக்கான காரணங்களை உணரந்து நிவர்த்தி செய்து, தன் ஆற்றலை பெருக்கி,இந்த ஆளுமை பண்பு தன்னை நிலைப்படுத்திக்கொண்டது. எங்கு? எங்கெங்கும். இந்த ஆற்றலை கொண்டு மற்ற அணுக்கள் எப்படி இயங்க வேண்டும் என்று நிர்ணயம் செய்கின்றது. ஆதி அனாதியான இயற்க்கை. அனாதி இயற்க்கையில் தோன்றிய அறிவு எனும் ஒளி ஆற்றல், இயற்க்கையை தன்வசப்படுத்திஇயற்க்கையை இயக்குகின்றது. இந்த ஒளிஆற்றலுடன்,வெப்பமும்,சப்தமும் இணைந்தே இருக்கும்.அதாவது ஒளி, ஒலி, வெப்பம்,ஆகிய மூன்றும் எப்போதும் இணைந்தே இருக்கும்.
இதுவே ஆளுமை பண்பு எனும் ஆதி இயற்க்கையாகும்.
இதன் பெயர் என்ன?
அவரவர் விருப்பத்தின்படி வைத்துக்கொள்வோம்.
நானாக நான் மட்டும் இருந்தேன். என்னிலிருந்தே நான் என்னை படைத்தேன். என்னை படைத்து என்னில் இருந்தே நான் ஆனந்தம் அடைய முயல்கின்றேன். தான் தானாகவும், தாம் தாமாகவும், அது அதுவாகவும், எது எதுவாகவும் எப்படி தானாக உண்டாகியதோ அதுவே நான். இறைவன். அதுவே இயற்க்கை. இயற்க்கை எனும் கடவுள் இயங்குகிறார் அவருக்குள் இருந்தவைகள் வெளிப்படுகின்றன. வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது.
அதுவே விஞ்ஞானம், ஞானம் ,மெய்ஞானம்மாகும். மற்றும் இதுவே பிரபஞ்சம், வெளி, காலம் எல்லாம் ஆகும்.

இயற்க்கை ஏன் இயங்குகிறது எப்போது இயக்கம் முடியும் என்று எவருக்கும் தெரியாது ஏன் இயற்க்கைக்கும் தெரியாது தெரிந்து இருந்தால்வெளிப்படுத்தியிருக்கும். வெளிப்படுத்தும்போது அறியாமை வெளியேறும். அறியாமை வெளியேறியபோது அறிவு விளங்கும். அதாவது அறிவு வெளிப்படும். சுருங்¢கக்கூறின் இயங்குவது இயற்க்கை, அதுவே எல்லாம் .அதுவே கடவுள். அதுவே நாம். இயற்க்கையின் பெயரைச்சொல்லியும் இறைவன் பெயரைச்சொல்லியும் இவைகளை இல்லைஎன்று மறுத்தும், மக்களின் அறியாமையை உபயோகப்படுத்தி மக்களைச் சுரண்டும் கூட்டத்தினரைதடுப்பது எவர்? இயறக்கைதான்,கடவுள்தான், நாம்தான் தடுக்க வேண்டும். இதற்க்கு எவர் இசைவர்.இதற்க்கு ஒத்துழைப்பு கொடுப்பவர் எவர். தடுக்க வந்த எத்தனையோ நபர்கள் மக்களின் ஒத்துழைப்பின்மையால் மனம் வருந்தி சென்றுவிட்டனர். மாறும் என்பது மாறாது என்னும் நியதியின்படி,நாம் மாறிக்கொண்டிருக்கிறோம் நாம் இயங்கிக்கொண்டு இருக்கிறோம். விரிவடைந்துகொண்டு இருக்கிறோம். உள்ளது உள்ளபடிஇருக்கிறது.அது இயங்குகிறது. அவ்வளவுதான். இவற்றை விரிவடைவதாக கருதுகிறோம். உதாரணமாக, 1000 கிலோ இரும்பை ஒரே கட்டியாக இருப்பதாக வைத்துக்கொண்டால், இது இயற்க்கையாகும். இதுவே மாறுதலுக்கு உட்பட்டு பொருள்களாக மாறும் போது விரிவடைவதாககருதுகிறோம். நாம் கடவுளாகிய நமக்குள் இருப்பவற்றை ஒவ்வொன்றாக வெளிப்படுத்தி மகிழ்கின்றோம். கடவுள் எனும் இயற்க்கையாகிய நமக்குள் இருந்த ஞானம் வெளிப்பட்டபோது விஞ்ஞானமாகும். {விளங்கிய ஞானம் விஞ்ஞானம்} ஞானம் என்பது அறிவாகும்.கடவுளே, கடவுளை, தானாக, தனக்காக, இயக்கும் இயக்கமே பிரபஞ்ச இயக்கமாகும். இருக்கிறது என்று சொன்னாலும் இருந்தது என்று சொன்னாலும் இனியும் இருக்கும் என்று சொன்னாலும் அது இயற்க்கை எனும் கடவுள் மட்டுமே. இறைவன் எனும் இயற்க்கையானது தன்னிடம் அணுக்களாக உள்ள ஆன்மா எனும் அணுக்களைநான் எனும் ஆணவத்தின், ஆசையின்படியும், தகுதி எனும் அனுபவ பக்குவத்தின் படியும்தேகத்தை கொடுத்து, தேகத்தை இயக்கி இன்ப துன்பங்களை அடையச்செய்கிறது.இறைவன் எனும் இயற்க்கை தனக்கு எந்தவித விருப்பு வெறுப்பின்றி அணுக்களாகிய ஆன்மாக்களை இயக்குகின்றது. இறைவனின் இந்த நிலை அறிவுநிலை எனப்படும். இது இயற்க்கை அறிவாகும். இந்த பிரபஞ்சம் அளவுகடந்த,வல்லமையும் இயக்கங்களையும் கொண்டிருந்தது. இவ்வாறு ஏற்ப்பட்ட இயக்கத்தினால் வந்த நாம் காலம் காலமாக பிரபஞ்சத்தின் உண்மையை அறியமுயன்று கொண்டு வந்தோம். அவ்வாறு முயலும்போது என்னற்ற அதிசயங்களை கண்டோம். அவை நம்மால் மட்டும் நிகழ்ந்தது என்று நம்பினோம். நாமும் இப்பிரபஞ்சத்தின் ஒரு உறுப்பு[அங்கம்]தான் என்றும் இறைவனாகிய இயற்க்கையின் அங்கம் என்பதை உணரத்தவறினோம் நாம் காணும் இயற்க்கையின் வல்லமை நம்முள் உள்ளது தான் என்று உணராமல் வெளியே இருப்பதாக கருதினோம். நம்மில் சிலர் முற்க்காலத்தில் இந்த உண்மையை உணர்ந்து தனக்குள் இருந்த இயற்க்கையின் அற்புதஆற்றலை வெளிப்படுத்தினர். அப்போது நாம் பிரமித்து அவர்களைக்கண்டு அஞ்சினோம். அவர்களை நாம ¢கடவுள், கடவுளின் தூதர், குரு, ஞானி, சித்தர், யோகி, ரிஷி,முனிவர
என்றுகருதி அவர்களை வணங்கினோம். அவர்களின் வாழ்வுக்கு பின்னர் அவர்களின் உருவத்தைகோவில்களில் வைத்து வழிபாடு செய்து வந்தோம். நாம் பயந்து வழிபாடு செய்து வந்தவர்கள்,நாம் நன்றாக வாழ வேண்டும் என்பதற்க்காக வழி முறைகளைக்கூறினர். அவர்கள் கூறிய கருத்துக்களை நுட்பமாகவும் , மறைவாகவும் வைத்து, கதைகளாகவும் பரிபாசையாகவும்[பலரும் பலவிதமாக புரிந்து கொள்ளுமாறு]கூறினர். அவர்கள் கூறியது, போற்றிப்பாடியது எல்லாம், இயற்கையை இறைவனாக உருவகப்படுத்தி கூறினர். இயற்க்கையை இயற்க்கை என்று கூறி இருந்தால் மக்கள் இயற்க்கையின் சிறப்பை உணரமாட்டார்கள் என்ற காரணத்தினால் šவாறு கூறினர். அதனால் இயற்க்கையை இறைவனாக உருவகப்படுத்தி கூறினர்.



































எனக்குள் தோன்றிய சிந்தனைத்துளிகள்

 இயந்திரம் = தேகம். இயந்திரம் இயங்க எரிபொருள் = அணுக்கள்,உணவு, காற்று. இயந்திரத்தை உபயோகிப்பாளர் = ஆன்மா, ஒளி.
இயக்கம் = ஒளி, ஆன்மா, ஒளி ஆற்றல். light power
 இயக்கி = எண்ணம், மனம், soft ware,
இயங்கு பொருள் = உடல் உறுப்புகள்,spare parts, hard ware.
 அறிவு = சிவம். இதுவே ஆன்மா. இதுவே ஆளுமை பண்பு.

 பொருள்களின் அமைப்பு, இயங்கவேண்டியவிதம் ஆகியவற்றை தீர்மானிக்கின்றது. அறிவும், சிவமும், இயங்காது. பிற பொருள்கள் எப்படி இயங்க வேண்டும் என்பதை நிர்ணயம் செய்யும்.

 அறிவு நிர்ணயம் செய்தபடி இயங்குவது சக்தி ஆகும்.
சக்தியே பொருள்களை இயக்குகின்றது. இதுவே மனம் ஆகும்.
மனம் தானாக இயங்காது. அறிவின் தீர்மானப்படி மனம் இயக்கும்.
 மனம் எதனை இயக்கும்?
 மனம் உடலை இயக்கும்.
 அறிவு நிச்சயிக்கும்.
 மனம் இயக்கும்.
 உடல் இயங்கும்.
அறிவை இயக்குவது எது?
அறிவை இயக்குவது அனுபவம்.

. E= MC* என்பதில்
Eஎன்பது சக்தி ஆகும்.
M என்பது பொருளின் பொருண்மை என்னும் நிறை ஆகும்.
 C என்பது ஒளியின் வேகம் ஆகும்.
 அதாவது ஒரு பொருளின் சக்தி என்பது பொருளின் அமைவும், ஒளியின் வேகத்தின்           இருமடங்கின் பெருக்கமும் ஆகும். இது விஞ்ஞானத்தில், அணுவின் பொருண்மை விதியாகும்.

அணு என்றால் ஆன்மா.
ஆன்மா என்றால் விந்து.
 விந்து என்றால் ஒளி.
ஒளி என்றால் அகரம்.    
அகரமே அணைத்துக்கும் ஆதி வித்தாகும்.
அகரமாகிய ஒளியில், ஒலி இருந்தது.
ஒலி என்றால் உகரமாகும்.
அகரமும், உகரமும் சேர்ந்துள்ளபோது மகரமாகும்.
மகரத்தில் இருந்து வெளிப்பட்டதுஅக்னி ஆகும். அல்லது மகரமே அக்னியாகும்.

 ஆதி இருந்தது அது எல்லையற்ற எல்லையாக இருந்தது.
 அது சிவம் என்னும் அகரமாக, அறிவாக ஒளிர்ந்தது. அது அதிர்ந்தது,அசைந்தது, அதுவே              உணர்வானதுமாகும்.
 உகரம் எனும் சக்தியாக இருந்தது.இதுவே அசைவதற்க்கு முன்னர் ஒளிர்வாக இருந்தது.
 ஆன்மா என்னும் அணு இருந்தது. அதற்க்குள் அகம் இருந்தது.
 அகத்துள் அகரமாகிய அறிவு இருந்தது.
 அகத்துக்குள் உகரமாகிய உணர்வு இருந்தது.
 அந்த உகரமாகிய உணர்வு௧கு, அகரமாகிய உள்ளத்தில் இருந்து உள்ளும் புறமும் கடக்கு
 ¡மை இரு௮தது.

 இந்த ஆகாயத்தின் அகத்தில் அக்னி இருந்தது.
 இந்த அக்னியில் சப்தம் இருந்தது.
 இதற்க்கு நாதம் என்றும் உகரம் என்று பெயர்.
 இந்த உகரத்தில் ஒளி இருந்தது
 இதற்க்கு விந்து என்றும், அகரம்என்றும் பெயர்.
 இந்த ஆன்மா, ஒளி, விந்து,அகரம்,{ நான்கும் ஒன்றே}என்பது உற்பத்திக்கு{ காரணமானது.}

 இந்த அகரமான ஒளி உலக உற்பத்திக்கு வித்தாக அமைந்தது.
 இந்த அகர ஒளியில் உடம்பு எனும் உகரம் தோன்றும் தன்மையிருந்தது.
 இந்த உகரம் தேகம் தோன்ற இடமானது.
இதுவே காரியமானது.{ காயமானது.} இந்த உகரம் எங்கும் வியாபித்து விசாலமாகும் தன்மையிருந்தது.{ஆகாயமானது.} இந்த காரணத்தையும் காரியத்தையும் உள்ளடக்கியிருந்ததுதான் ஆகாயம் ஆகும். இந்த ஆகாயம் விரிவடையும் சுபாவத்தை உடையதாகும். இந்த ஆகாயம் பூரணமாக இருந்தபோது சிகரம் எனும் சிரசாகும். இந்த ஆகாயம் எனும் சிரசில் வகரம்,அல்லது பகரம் இருந்தது. இந்த வகரம் ஆகிய பகரத்தில், மையம் இருந்தது. இதற்க்கு புருவமையம், என்றும் உருவ மையம் என்றும் பெயர். இதுவே அனைத்து கருத்துக்களின், கருத்து மையமான கரு மையமாகும். இம்மையத்திற்க்கு அனைத்தையும் கிரகிக்கும்{உள்வாங்கும்} தன்மை இருந்தது. இது கூடுதலும், குறைதலும்,{ஏற்ற,இறக்கம்} உடைய பண்பை பெற்றிருந்தது. இதுவே அனைத்திற்க்கும் முதன்மையாகவும், தலைமையாகவும் இருந்தது. இதிலிருந்து வெளியேறும் எல்லாவற்றிலும் இதுவும் இதன் தன்மையும் இருப்பதாக இருந்தது. இவ்வனைத்து தன்மைகளையும் உடையதாகி அகம் இருந்தது. இந்த அகத்திற்க்கு புறம் இருந்தது. அகத்தில் அக கவர்ச்சி அதிகரித்தது. இதனால் அகத்தில் உள்ள அக்னி,ஆளுமை கொண்ட ஒளியாக, வெளியேறும் நிலை ஏற்ப்பட்டது. இந்த ஆளுமை கொண்ட ஒளியுடன் வடிவமைக்கும் தன்மையான ஒலிக்கு இயங்கும் நிலை ஏற்ப்பட்டது. ஒளி= இயக்கும் ஆற்றல், ஒலி= இயங்கும் கருவி. அக்னியின், ஆளுமை கொண்ட ஒளிக்கு அனைத்தையும் நிர்ணயிக்கும் நிலை ஏற்ப்பட்டது. அதனால் அதனிடமே உள்ள, வடிவமைக்கும் தன்மையான ஒலிக்கு கட்டளயிட்டது. {எப்படி இயங்க வேண்டும் என்பதை நிர்ணயிக்கும் தன்மைக்கு எண்ணம் என்று பெயர்.எண்ணத்தின்படிஇயங்குவது எழுத்து ஆகும்.} எனவே ஒலி எண்ணாகவும் எழுத்தாகவும் வார்த்தையாகவும், வாக்கியங்களாகவும் அமைத்துக்கொண்டது.இவ்வாறு அனைத்து வல்லமைகளையும் கொண்டு மனித தேகமும் விளங்கும் தன்மையுடையதாக இருந்தது. இப்பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு அணுவிலும், ஒவ்வொரு பொருளிலும், இந்த பிரபஞ்சத்தைதோற்றுவித்த மூலப்பொருளாகிய அகர ஒளியாகிய சிவம் அமர்ந்து {இருந்து} செயல்படுகிறது. இந்த பிரபஞ்சத்தில் என்ன என்ன இருக்கிறதோ அத்தனையும்அமைந்திருப்பது மனித தேகமாகும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக