நான்
நான் இப்போது தற்சமயம் இருக்கிறேன்.
இதற்க்கு முன்பு இருந்தாயா?
தெரியாது.
நாளை இருப்பாயா? என்றும் இருப்பாயா?
உறுதி கூற முடியாது.
நான் எங்கு இருக்கிறேன்?
தேகத்தில் இருக்கிறேன்.
நான் என்பது என்ன?
தெரியாது.ஆனால் தேகத்தில் ஏற்ப்படும் இன்ப துன்பங்களை ஏற்பதுவாகவும்,உணர்வதுவாகவும்
அறிவதுமாக உள்ளதை நான் என்று கூறலாம்.
நான் இருக்கும் தேகத்தை உருவாக்கியது எது?
தெரியாது. நான் உருவாக்கவில்லை.
என் தேகம் நிலம்,நீர்,நெருப்பு, காற்று, ஆகாயம், எனும் ஐம்பூதங்களால் உண்டானதாக முன்னோர்கள் கூறுகின்றனர் இவை எனக்கு ஏற்ப்பு உடையதாகவும் தோன்றுகிறது.
உன் தேகம் பஞ்ச பூதங்களால் தோன்றியதா?
ஆமாம். அப்படித்தான் கருதுகிறேன்.
உன் தேகத்தை எப்படி பெற்றாய்?
என் தாய், தந்தையர் சேர்க்கையால் தாய் மூலமாகப்பெற்றேன்.
உன் தாய் தந்தையருக்கு உன்னை உருவாக்கும் அறிவும் திறமையும் உள்ளதா?
இல்லை. என்னால் கூற முடியாது.
எப்படி கூறுகிறாய்?
என்னை உருவாக்கும் அறிவும், திறமையும் இருந்தால் என்னை அழியாமல் தேகத்தை பாதுகாக்கவும் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் என் தேகம் அழிந்து விடுகிறது.
நான் இறந்து
விடுகிறேன்.என் தேகத்தை நானும் உருவாக்கவில்லை.
தாய் தந்தையருக்கும் உருவாக்கும் ஆற்றல்
இல்லை. அப்படி எனில் என்னால் எவரிடமாவது வேண்டுதல் செய்யப்பட்டோ அல்லது விரும்பபட்டோ ஏதோ ஒரு மாற்று சக்தியால் உருவாக்கப்பட்டதா?அல்லது என் தேகம் தன்னைத்தானே பரிமாணவளர்ச்சியில் உருவாக்கிக்கொண்டதா?
தன்னைத்தானே பரிமானவளர்ச்சியால் உருவாக்கிக்ககொண்டதாக இருந்தால் ஏன் இறவாமல்
பாதுகாக்க தெரியவில்லை?தேகம் அழியாமல் இருக்குமா?
அதற்க்கும் திரூபணம் இல்லை.
நிரூபணமாக கூறும் உதாரணங்களும்
வாத பிரதிவாதத்துக்கும், சந்தேகத்திற்க்கும் இடமாயுள்ளது.
இறப்பது இயற்க்கை ஆகும்.
இறப்பது இயற்க்கை என்றால்இயற்க்கைக்கு அந்த வல்லமையையும், உரிமையையும், கொடுத்தது யார்?அல்லது எப்படி வந்தது.
இப்படி எல்லாவற்றிற்க்கும் ஏன் எப்படி என்று கேட்டால் முடிவில் உள்ள கேள்விக்கு பதில் இல்லை. ஒரே பதில் அது அப்படி இருக்கிறது. அல்லது அது அப்படிதான் இருக்கும்.
இயற்க்கை தானாக வந்தது என்றால் எப்படி ஏன் வந்தது என்ற கேள்விக்கு பதில் இல்லை.
வேறொரு சக்தியால்{கடவுளால்}
படைக்கப்பட்டது என்றால், கடவுள் ஏன் படைத்தார், அவருக்கு
படைக்கும் எண்ணம் ஏன் உண்டாயிற்று அவருக்கு அந்த அதிகாரமும் வல்லமையும் எப்படி வந்தது
என்ற கேள்விக்கு பதில் இல்லை.
விஞ்ஞானத்தின்படி,
அணுக்கள் எப்படி தோன்றியது அவற்றை உருவாக்கியது எது? தானாக வந்தது என்றால் ஏன்?எப்படி?வந்தது என்றால் இந்த கேள்விக்கு பதில் இல்லை.
ஆன்மீகவாதிகளின் கருத்துப்படியும்,
இயற்க்கைவாதிகளின் கருத்துபடியும், விஞ்ஞானிகளின் கருத்துபடியும்,
இவர்களின் கருத்துக்களுக்கெல்லாம் மூலம் ஏன் எப்படி உண்டானது என்பதற்க்கு
விடை இல்லை.
உலகத்தில் மனிதர்கள் தோன்றிய காலம் முதல் இந்த சிந்தனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மேற்படி விசயங்களைப்பற்றி அவரவர் நிலையில் அவரவர் சிந்தனைக்கேற்ப்ப அவரவர் ஒரு
கொள்கையை வகுத்துக்கொண்டு அதன்படி வாழ்ந்து வந்தனர்.பின்னர் தனது சந்ததியருக்கு
இந்த கொள்கையை போதித்து அதனை கடைபிடிக்க வழி வகுத்து சென்றனர்.
உலகத்தில் மனிதர்கள் தோன்றிய நாளிலிருந்து,நம் முன்னோர்கள் முதற்க்கொண்டு நம் காலம் வரை பிரபஞ்ச தோற்றத்தை பற்றி தெரிந்து கொள்ள பலவித கற்பனைகளாலும்,
பலவித அனுமானங்களாலும் முயற்ச்சி செய்து கொண்டு வருகிறோம்.
இது எப்படி என்றால் பிரபஞ்சம் என்னும் எண்ணற்ற மர்மங்களை உடைய அரங்கத்தில் நுழைந்து
ஒவ்வொரு மர்மங்களையும் வெளிப்படுத்திக்கொண்டு இருக்கிறோம்.
எல்லா மர்மங்களின் உறைவிடம் அறிவே ஆகும். இந்த அறிவு நம்மிடம்தான் உள்ளது.
எல்லாவற்றையும்
தன்வசம், உள்ளடக்கி வைத்துக்கொண்டது பிரபஞ்சம் ஆகும்.
நாம் பிரபஞ்சத்தின் அங்கமாக இருக்கிறோம்.
பிரபஞ்சத்திற்க்கு புறத்தில்
{வெளியில்}
எதுவும் இல்லை.
பிரபஞ்சத்தில் உள்ளது பிரபஞ்சத்தை விட்டு விலகி வேறு எங்கும் செல்ல முடியாது.
பிரபஞ்சத்திற்க்கு வெளியே இருந்து வேறு ஒன்று பிரபஞ்சத்திற்க்குள் பிரவேசிக்கவும் முடியாது.
விஞ்ஞானிகளின் கருத்துக்கள்
கண்ணுக்கு தெரியாத அணு, அணுவில் உள்ளது புரோட்டான் என்றும்
புரோட்டானைச் சூழ்ந்துள்ளது நியூட்ரான் என்றும்.
இவற்றை சுற்றி வருவது எலக்கட்ரான் என்றும்
இந்த எலகட்ரான் எட்டு சுற்று பாதைகளில் சுற்றி வருகிறது என்றும்
மேலும் எலக்ட்ரானில் இருந்து போட்டான்
photons என்பது வெளிப்படுகிறது
என்றும்புராட்டான்களில் பொடிமங்கள் எனப்படும்
quark என்பது உள்ளது என்றும்
ஆனால் இவையெல்லாம் கண்ணுக்குத் தெரியாது என்றும், இருப்பினும் இவற்றில்
உள்ள ஒளியைஅலைகளாக கண்டுபிடித்து அளவீடு செய்ய முடியும் என்றும்
கூறுகின்றனர்.அணு என்னும் பொருள் இயங்குவதை,
வேதியல் மாற்றங்களை,
விஞ்ஞானிகள் மனத்தினாலும்எண்ணங்களினாலும் கருதிக்கொண்டும்,
நினைத்துக்கொண்டும், கற்பனைகளாக உருவாக்கி காரணம் கூறி வருகின்றனர்.
சுருங்ககூறின் பொருள்களை பற்றிய கருத்துக்களே எல்லாம்.
பொருள்களைப்பற்றிய
எண்ணங்களே எல்லாம். மற்றபடி அனுமானம் தவிர
வேறொன்றுமில்லை.
அதாவது இருப்பது பொருள் மட்டுமே. இயங்கும் பொருளை விளங்கி கொள்வதற்க்கும் மற்றவர்களுக்கு விளக்கி காட்டும் உதாரணங்கள்தான் இவ்வாறாக கூறி வருகிறோம்.
ஆன்மீகவாதிகளின் கருத்துக்கள்.
ஆன்மா என்றால் என்ன? அன்பு என்றால் என்ன? மனம் என்றால் என்ன?
அறிவு என்றால் என்ன? இவைகளுக்கெல்லாம் எவரிடத்திலும் விளக்கம் இல்லை.
ஆன்மா, அன்பு, அறிவு, மனம், இவைகள் கண்ணுக்கு தெரியாதவை.மேலும் இவைகளை எல்லாம்
இயக்கும் கடவுள் உள்ளது என்றும் கூறுவர்.
முடிவாக கூறினால் அணுக்கள் இயங்குகின்றது.
அவ்வளவே உலகம், பிரபஞ்சம் எல்லாம்.
இவற்றை பற்றி கற்பனை கருத்துக்கள் அனேகம்.
உலகம் தோன்றிய காலம் முதல் கூறப்பட்டு வரும் கதைகளும், கற்பனைகளும்,
கருத்துக்களும் ஏராளம்.
அணுவையும், கடவுளையும் இதுவரை எவரும் கண்டதில்லை.
அது இருக்கிறது.
உலகம் என்பதும், உலகத்தைப்பற்றிய விளக்கங்களும் அவரவர் கருத்துக்களே
அவரவர் எண்ணங்களே, அவரவர் கற்பனைகளே, ஆன்மீகவாதிகள்
இதனை மாயை என்கின்றனர்
ஆன்மீகமோ, அல்லது விஞ்ஞானமோ,
எதை கண்டுபிடித்தும் என்ன பயன்?
கீழ் கண்ட உதாரணத்தின் மூலம் அறிந்து கொள்வோம்.
ஒரு அரசனுக்கு இப்பிபஞ்ச வரலாற்றை அறிந்து கொள்ள ஆசை வந்தது. உடனே தன்
மந்திரிகளை வரவழைத்து தன் எண்ணத்தை வெளிப்படுத்தினான். மந்திரிகள் ஒன்று கூடி
நாட்டில் உள்ள சிறந்த பண்டிதர்களை வரவழைத்து மன்னரின் எண்ணத்தை ஈடேற்றுமாறு
பணித்தனர்.பண்டிதர்கள் ஒவ்வொருவரும் தகவல்களை சேகரித்து தலைமை பண்டிதரிடம்
கொடுத்தனர்.தலைமை பண்டிதர் பத்து குதிரைகளில் ஏற்றி தகவல்களை தலைமை மந்திரியிடம் கொடுத்தனர்.மந்திரி அரசனிடம் சமர்ப்பித்தனர்.அரசன் அவைகளை பார்த்துவிட்டு
இவைகளை சுருக்கி கொண்டு வருமாறு பணித்தார்.
சிலநாட்கள் கழித்து மந்திரிபண்டிதர்களை வைத்து சுருக்கி மூன்று குதிரைகளில் ஏற்றி சென்று மன்னரிடம் சமர்ப்பிக்க,
மன்னர் அவற்றையும் சுருக்கி கொண்டு வரும்படி கூற, இறுதியில் ஒரு குதிரையில் ஏற்றிச்சென்று சமர்ப்பிக்க, அவற்றையும்
சுருக்கி வரும்படி கூற, மன்னரின் செயலை தலைமை மந்திரி, ராஜ குருவிடம் கூற, ராஜகுரு ஒரு
ஓலைத்துண்டில் மூன்று வரிகளை எழுதி ஒரு சிறுபேழையில் வைத்து மன்னரிடம் கொடுக்குமாறு
கொடுத்தார்.
அடுத்தநாள் மந்திரி அந்த பேழையை மன்னரிடம் கொடுத்தார்.மன்னர் அந்த பேழையை வாங்கி பார்த்து விட்டு மிகவும் கோபமாக நான் கேட்ட அணைவரின் சரித்திரமும்
இந்த பேழையில் உள்ளதா என்று கேட்க அதற்கு ஆமாம் என்று மந்திரி பதில் ஆமாம் என்று
கூறினார். மன்னர் அந்த பேழையை திறந்து ஓலைத்துண்டில் எழுதி இருந்ததை படித்து பார்த்தார்.
அதில் இருந்தது என்ன என்றால். அதில் இருந்த மூன்று வரிகள்.
மனிதர்கள் பிறந்தார்கள்.
உயிர்கள் பிறந்தன.
மனிதர்கள் வாழ்ந்தார்கள்.
உயிர்கள் வாழ்ந்தன.
மனிதர்கள் இறந்தார்கள்.
உயர்கள் இறந்தன.
ஆன்மீக காலமோ, விஞ்ஞான காலமோ, அல்லது அதற்க்கு முந்தைய காட்டுமிராண்டி காலமோ
எல்லா காலத்திலும் நடப்பது இதுதான்.இதன் பயன் என்ன? மனதின் ஆசைகளை நிறைவு
செய்வதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. இதை உணர்ந்தால் எப்போதும் நிம்மதியாக இருக்கலாம்.எனவே ஆசைகளை ஒழுங்கு படுத்த வேண்டும். ஆசைகள் ஒழுங்காக இருக்க,
மனதை வசப்படுத்த வேண்டும். மனதை வசப்படுத்த,
மனதை வசப்படுத்துவதின் மகிமையை தாயுமானவர் கூறுகிறார்.
கந்துஉக மதக்கரியை வசமா நடத்தலாம்;
கரடிவெம் புலிவாயையும்
கட்டலாம்; ஒருசிங்கம் முதுகின்மேல் கொள்ளலாம்;
கட்செவி எடுத்துஆட்டலாம்;
வெந்தழனின் இரதம்வைத்து ஐந்துலோ கத்தையும்
வேதித்து விற்றுஉண்ணலாம்;
வேறுஒருவர் காணாமல் உலகத்து உலவலாம்;
விண்ணவரை ஏவல்கொளலாம்;
சந்ததமும் இளமையோடு இருக்கலாம்; மற்றுஒரு
சரீரத்தினும் புகுதலாம்;
ஜலம்மேல் நடக்கலாம்;
கனல்மேல் இருக்கலாம்;
தன்நிகர்இல் சித்திபெறலாம்;
சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற
திறம்அரிது;
சத்துஆகிஎன்
சித்தமிசை குடிகொண்ட அறிவுஆனதெய்வமே
தேஜோ மயானந்தமே
எண்ணங்களின் தொகுப்பால் உண்டாவதே மனம்.
எனவே எண்ணங்களில் தூய்மையாக இருக்கவேண்டும்.
எண்ணங்கள் தூய்மையானால் வார்த்தை தூய்மையாகும்.
வார்த்தை தூய்மையானால் செயல்கள் தூய்மையாகும்.
செயல்கள் தூய்மையானால் பழக்கம் தூய்மையாகும்.
பழக்கம் தூய்மையானால் வழக்கம் தூய்மையாகும்.
வழக்கம ¢தூய்மையானால் மரபு தூய்மையாகும்.
மரபு தூய்மையானால் சமுயாயம் தூய்மையாகும்.
இவற்றை பின்பற்றும் வழிமுறைகள் மனிதன்
அறிந்துகொள்ள வேண்டியது என்னும் தலைப்பில் முதலில் கூறப்பட்டுள்ளது.
இவைகளை பயில்வதுதான் முயற்ச்சியாகும்.
இதுதான் நன்முயற்ச்சியோடு இருத்தல் ஆகும்.
வள்ளுவன் கூறியபடி மனத்துக்கண் மாசிலன் ஆதல் வேண்டும்.
உள்ளத்தில் உள்ளுவதாகிய,
எண்ணுவதாகிய எண்ணங்களில் உள்ள வஞ்சம் ,பொய்,
களவு,சூது, சினம் ஆகிவற்றை நீக்குதல் வேண்டும்.
அதாவது அழுக்காறு,
அவா,
வெகுளி,
இன்னாச்சொல்,
முதலிவற்றை நீக்குதல் வேண்டும்.
இவைகள் இயற்க்கை அறிவு என்னும் இறை அறிவை மறைத்துக்கொண்டு இருக்கிறது.
இவை நான்கும் இயற்க்கைநிலை எனப்படும்,
இறைநிலையை
அடைவதற்க்கு உரிய அறச்செயல்களுக்கு தடைகளாகும்.
நம் தேகம் அணுக்களின் சேர்க்கையாகும்.
அணுக்கள் ஒன்றுசேர்ந்து செல் ஆனது.
செல்கள் ஒன்றுசேர்ந்து திசு ஆனது.
திசுக்கள் ஒன்றுசேர்ந்து உறுப்பானது.
உறுப்புகள் ஒன்றுசேர்ந்து உடலானது.
இதை கடை பிடிக்காமல் யோகாசனம், பிராணாயாமம்,
கண்களை முடிக்கொண்டு
தியானம்செய்வது,
மந்திரம் ஜெபித்தல், கோவிலுக்கு சென்று இறைவனை வழிபடுதல்,
விரதம் இருத்தல், உணவு கட்டுப்பாடுகளை கடைபிடித்தலால் அற்ப பிரயோசனம்
மட்டும் கிடைக்கும். வெற்றியின்இலக்கான இயற்க்கைநிலையெனும்,
இறை நிலையை அடைய முடியாது.மேற்க்கூறிய ஒழுக்க நெறிகளை கடைப்பிடித்து,
அவற்றோடு இவைகளையும் கடைப்பிடித்தால் இறைநிலை எனப்படும்
இயற்க்கைநிலையை அடையலாம்.
யோகாசனம் செய்தால் உடலுக்கு வலிமை உண்டு.
தியானம் செய்வதாலும்,
மந்திரம் ஜெபித்தலாலும், ஒரு உருவத்தை நிணத்துக்
கொண்டிருந்தாலும்பிராணாயாமம் செய்வதாலும் இவைகளால் மனதுக்கு வலிமை உண்டு.அவ்வளவு தான் பயன். இறைநிலையை அடைய முடியாது.
மேலும் எல்லாம் கடவுள் என்றும், எனக்குள்ளும் கடவுள் உள்ளது என்று
கூறிக்கொண்டிருந்தால் காலவிரயமும்,
துன்பங்களும் தான் மிஞ்சும்.
செயலின்றி பயன் இல்லை.
மனிதன் ஒழுக்கமாக வாழக்கற்று கொள்ளாதவரை மனிதனிடம் எவ்வளவு
நல்ல திட்டங்களை கூறினாலும் மனிதன் அவற்றை கடைப்பிடிக்கமாட்டான்.
எனவே சமுதாய சீர்திருத்தவாதிகள் மக்களிடம் நல்ல ஒழுக்கத்தை கடைப்பிடிக்க கற்றுக்கொடுங்கள்.
பின்னர் நல்ல உங்களின் திட்டத்தை கற்றுக்கொடுங்கள்.
இப்படி செயல்படாத காரணத்தினால்தான், பொதுவுடமை எனும் இயற்க்கை
நியதி இன்னும் வெற்றி பெற முடியவில்லை.
இயற்க்கையை கவனியுங்கள்.
அவற்றிடையே உள்ள ஒழுக்கத்தை கவனியுங்கள்.
அது போலவே மக்களாகிய நாமும் ஒழுக்கத்தோடு வாழ்ந்து இயற்க்கையின் மிக உயர்ந்த ஆற்றலை பெற்று நிலைத்து, நீண்ட நாள் வாழலாம்.
ஏனெனில் நாம் இயற்க்கையின் அங்கம். நமக்கு, இயற்க்கைக்கு
உள்ள மிக உயர்ந்த ஆற்றலைப்பெற உரிமை உண்டு.
இந்த ஆற்றல் நம்மிடம் இருக்கிறது.
ஆற்றலைவெளிப்படுத்த நாம் ஒழுக்கத்தை கடை பிடிக்க வேண்டும்.
நாம் இயற்க்கையின் ஒரு அங்கம் என்பதை உணரவேண்டும்.
நம்மிடம் உள்ள தீய குணங்கள் யாவும் இயற்க்கையிடம் இருக்கிறதா
என்று சிந்தித்து பாருங்கள்.
இயற்க்கையில் உள்ள சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், ஒன்றுக்கு ஒன்று துன்பமோ, இடைஞ்சலோ செய்கிறதா?
சிந்தித்து பாருங்கள்.
தீய குணங்கள் இயற்க்கையிடம் இல்லை என்பதை உணருங்கள்.
உணர்ந்து ஒழுக்கத்தை கடைபிடித்து, ஒருவருக்கும ¢உதவி செய்யாவிட்டாலும்
துன்பம் செய்யாமல் வாழ்ந்து இயற்க்கையைப்போல் அழியாமல் இருங்கள்.
ஆனந்தமாக எப்போதும் வாழுங்கள்.
இந்த ஒழுக்க நெறியை முன்னோர்களும்,
சித்தர்களும்,
சன்மார்க்கம் என்றும், சாகாக்கல்வி
என்றும்மரணமில்லா பெருவாழ்வு என்றும் கூறினர்.
இயற்க்கையே பொது உடைமையாக இருந்த போதும், மக்களிடம் ஒழுக்கத்தை
கடைபிடிக்கும்குணம் இல்லாததால் மட்டுமே, இயற்க்கை நியதியாகிய
பொதுவுடைமை வெற்றி அடையவில்லை.
மனிதன் ஒழுக்கமாக வாழ்வதை முற்றிலும் மறந்துவிட்டான்.
மீண்டும் ஒழுக்கத்தை கடைபிடித்து பழகி பூரணமான மனிதனாகி இறைநிலை
அடைவதாகும்.
இப்படி வாழ்ந்தவர்களைத்தான் பொதுமக்கள்அவர்களின்
உடல்களை கோவிலில் வைத்தும், ஆலயம், தர்கா,மற்றும்,சீவசமாதியில்
இருப்பவரையும் இறைவனாக வணங்கி வருகிறார்கள்.
இதில் பூரண நிலையை அடையாத மனிதர்களும் மக்கள் தன்னை வணங்க வேண்டும்
என்ற ஆசையினால் ஆலயத்தை அமைத்துக்கொண்டனர்.
இதனால் பயன் உண்டா? இதுஒவ்வொருவரின் நம்பிகையை பொருத்தது ஆகும்.
{இவ்வாறு வாழ்ந்தவர்களின் வரலாறு சரித்திரத்தில் இடம் பெற்றுள்ளது.சரித்திரத்தில் ஒருசிலர்
கற்பனை கதைகளையும்,பொய்யான தகவல்களையும்
புகுத்தி உண்மை வரலாறுகளையும் ஏற்று கொள்ள முடியாதவாறு செய்து விட்டனர்.
பொய் பொய்யாகவே இருக்கட்டும், உண்மை உண்மையாகவே இருக்கட்டும், நாம் உண்மையாக இருப்போம். வேறு கவலைகளும் சிந்தனைகளும் நமக்கு வேண்டாம்.
இவைகளை பொய்யா? மெய்யா
?என்று ஆராய்ந்து கொண்டிருப்பதால் பயன் இல்லை.
ஒழுக்கமாக வாழ்ந்தால்,
வாழ்பவருக்கும்,
சமுதாயத்திற்க்கும் நன்மையும்,மகிழ்ச்சியும் உண்டு.ஒன்று
சமுதாயம் பலன் அடையட்டும், அல்லது நீ பலன் அடைவாய். இது நிச்சயம்}
இவ்வாறு ஒழுக்கத்தை கடைபிடிப்பது எளிதானது அல்ல.
ஒழக்கத்தை கடைபிடிக்க தொடர் முயற்ச்சி செய்து வந்தால், ஒழுக்க உணர்வுகள் நிறைந்து,
அடுத்த தலைமுறைகளில் ஒழுக்கமான குழந்தைகளும்,
மகிழ்ச்சியான சமுதாயமும், காவல் நிலையங்களும்,
நீதிமன்றங்களும் இல்லாத சமுதாயத்தில் துன்பமில்லாத இன்பம் மட்டுமே
உள்ள உலகத்தில் நாம் வாழலாம்.
முயற்ச்சியை பற்றி வள்ளுவர் கூறுவதை கவனியுங்கள்.
தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்ச்சிதன்
மெய்வருத்த கூலி தரும்.
முயற்ச்சி திருவினை யாக்கும் முயற்றின்ம இன்மை புகுத்தி விடும்.
ஊழையும் உட்பக்கம் காண்பர் உளைவின்றி
ஓயாது உஞற்று பவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக