எனக்குள் தோன்றிய சிந்தனைத்துளிகள்
இந்தபிரபஞ்சம் எதனை அடிப்படையாக்கெண்டு இருக்கிறது?.
ஆகாயத்தை
இதற்க்கு முன்னோர்கள் என்ன பெயர் கூறினர்
சிவம், சதாசிவம், இடம், கண், பராபரம் என்று கூறினர்.
இந்த இடம் எனும் ஆகாயத்தில் என்ன இருக்கிறது?
பொருள் இருக்கிறது.
பொருள் என்றால் என்ன? அது எதனால் உருவாக்கப்பட்டது?
அது அணு. அணுக்களால் உருவாக்கப்பட்டது பொருள் ஆகும்.
அந்த பொருளின் நிலை என்ன? உருவம் என்ன?
வாயு நிலை. உருவம் இல்லை. அது அருவம்
வாயு தனக்குள் வைத்திருப்பது என்ன?
வாயு தனக்குள் வைத்திருப்பது வெப்பம் ஆகும்.
வெப்பத்தோடு இணைந்து இருப்பது எவை?
வெப்பத்தோடு இணைந்து இருப்பது ஒளியும், ஒலியும் ஆகும்.
அதாவது ஒளி,ஒலி,
வெப்பம்,
இவை மூன்றும் எப்போதும் இணைந்தே இருக்கும்.
இதற்க்கு முன்னோர்கள் என்ன பெயர் கூறினர்?
பிரணவம், ஏகத்துவம்,அத்துவைதம்,ஏகன், மும்மூர்த்தி, திருமூர்த்தி, திரிசூலம் என்றும் இன்னும்
அவரவர் மொழிக்கு ஏற்ப்பவும், அவரவர் வாழும் தேசத்திற்க்கு ஏற்ப்பவும் பலவாறு கூறினர்.
இவைகளுக்கு வேறு நிலைகளும் ஏற்படுமா? அவை என்ன?
ஆம், திரவ நிலை, திட நிலை ஆகும்.
எனவே இருப்பது இடம் எனும் ஆகாயம்
ஆகாயத்தில் இருப்பது பொருள் எனும் அணு
அணுவில் தோன்றியது வாயு
வாயுவின் நிலைகள் மூன்று
அவை, வாயு, திரவ, திட, நிலையாகும்
இயல்பான வெப்ப நிலையில் உள்ள அணுக்களுக்கு வாயு என்றும்.
இயல்பான வெப்ப நிலையைவிட தாழ்ந்த வெப்பநிலையில் உள்ள அணுக்களுக்கு திரவம் என்றும்
இயல்பான வெப்ப நிலையைவிட மிக தாழ்ந்த வெப்பநிலையில் இறுகிஉள்ள அணுக்களுக்கு திடப்பொருள்
என்றும் பெயர்.
இந்த மூன்று நிலைகளும் உண்டாவதற்க்கு காரணம் அக்னி ஆகும்.
வேதாந்தத்திற்க்கும், சன்மார்க்கத்திற்க்கும் உள்ள வேற்றுமை என்ன?
சமயத்திலும், மதத்திலும், வேதாந்தத்திலும் சுத்தத்தையும், தூய்மையையும் தீண்டாமையாக கருதிபேதம் உண்டாக்கி,
ஆன்மாக்களிடம் ஒற்றுமையும் சமரசமும் இல்லாமல் போயிற்று.
தூய்மை என்பது மனத்தூய்மை,
உடல் தூய்மை, செயல்களில் நேர்மை,
ஆகியவற்றை தவறாக கருதி மனிதர்களுக்குள் தீண்டாமையாக மாறிவிட்டது.
வேதாந்தத்தில் தீண்டாமையை கடைபிடிப்பவர்களுக்கு பரம்பரையாக தொடர்ந்து அருள் கிடைக்கும் என்று நம்பினர்.
சன்மார்க்கத்தில் தயவும்,
கருணையும் உடைய அனைவருக்கும் அருள் கிடைக்கும் என்பது
அனுபவம்.
சன்மார்க்கத்தில் முதலில் உயிர்களிடத்தில் அன்பும்,
தயவும் காட்ட வேண்டும். பிறகு தயவின்
மிகுதியால் யாகம் முதலியவைகளைச் செய்யலாம் என்று வரை முறை செய்யப்பட்டது.
சமயங்களிலும், மதங்களிலும்,வேதாந்தத்திலும் யாகத்திற்க்கு மட்டும் முக்கியத்துவம்
கொடுத்து
உயிர்களிடத்தில் அன்பும்,
தயவும் காட்டுவதையும் அறவே கைவிட்டனர்.
வெறும் மூடநம்பிக்கையாக்கி விட்டனர்.
வேதம் என்றால் என்ன?
வேதம் என்றால் பேதம் என்னும் மாறுதல் என்பது ஆகும்.அல்லது வேதியல் ஆகும்.
வேதியல் விதிகளுக்கு உட்பட்டது. மாறுதல் என்பது எல்லைகளுக்கு உட்பட்டது.
எது மாறுவது என்பதை குறிக்கிறது.
அணுக்களையும் அணுக்களால் நிறைந்த பொருள்களின் மாற்றத்தையும்
குறிப்பது ஆகும்.
ஒன்றிலிருந்து பொருள்கள் மற்றொன்றாக மாறுவதை கூறுவது ஆகும்.
இதற்க்கு தற்க்காலத்தில் நாம் வேதியல் என்று கூறுகிறோம்.
வேதம் என்ற வார்த்தையின் மொழி விளக்கம் என்ன?
வேதம் என்ற வார்த்தையின் மூலச்சொல் வேத என்பது ஆகும்.
வேத என்றால் மாற என்று பொருள் ஆகும்.
வேத என்ற வார்த்தையின் கிளைச்சொற்க்கள் வேது, வேதி, என்பது ஆகும்.
வேது என்றால் மாறு என்று பொருள் ஆகும்.
வேதி என்றால் மாற்றம் செய் என்று பொருள் ஆகும்.
வேதியல் என்றால் மாற்றம் செய்யும் பண்பு என்று பொருள் ஆகும்.
வேதியல் = மாற்றம் செய்யும் இயல்பு ஆகும்.
வேதத்தின் சாராம்சம் என்ன? அது எதனை விளக்குகிறது?
பிரபஞ்ச ஆற்றலின், செயல்படும் தன்மையை விளக்குகிறது.
பிரபஞ்சத்தின் தன்மையையும்,
அதன் இயல்புகளையும், பிரபஞ்சத்தின் செயல்பாடு, மற்றும்
செயல்முறைகளையும் , பிரபஞ்சம் அமைந்த விதத்தையும், கூறுகிறது.
வேதம் இயல்பானது ஆகும்.
இந்த பிரபஞ்சம்
வேதம் தோன்றுவதற்க்கு முன்பும்,இருந்தது.
வேதம் தோன்றும் போதும் இருந்தது.
வேதம் தோன்றிய பின்பும், இருக்கின்றது.
வேதம் யாரால் இயற்றப்பட்டது?
வேதம் எவராலும் இயற்றப்படாதது.
பிரபஞ்சமும் எவராலும் உண்டாக்கப்படாதது.
வேதம் எப்படி வெளியே கொண்டு வரப்பட்டது?
வேதத்தினால் தோன்றிய மனிதனின் முயற்ச்சியால் வெளியே கொண்டுவரப்பட்டது.
வேதத்தினால் தோன்றிய மனிதன் என்பது, மாறுதல்களை அடிப்படையாக கொண்டு
இயங்கும் பரிமாண வளர்ச்சியில் தோன்றிய மனிதன் என்பதாகும்.
மாறுதல்களை அடிப்படையாக கொண்டது வேதம்.
வேதத்தை அடிப்படையில் வளர்வது பரிமாணம்
பரிமாணத்தில் விரிவானது இப்பிரபஞ்சம்.
வேதத்தில் பிரபஞ்சமும்,
பிரபஞ்சத்தில் வேதமும் அடங்கி உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக